உலக அளவில் கொரோனாவுக்கு 80 லட்சம் பேர் பாதிப்பு

0 1040

கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 41 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மேலும் 3 ஆயிரத்து 258 பேர் உயிரிழந்ததால் பெருந்தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 21 லட்சத்து 62 ஆயிரம் பேர் என்ற நிலையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் பிரேசில் முன்னணியில் உள்ளது.

அமெரிக்காவில் 326 பேரும், பிரேசிலில் 600 பேரும் மரணித்துள்ளனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 17 ஆயிரம் பேருக்கும், அமெரிக்காவில் 20 ஆயிரம் பேருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளைத் தொடர்ந்து மெக்ஸிகோவில் 424 பேரும், இந்தியாவில் 321 பேரும், சிலியில் 222 பேரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் குறைவாக இருந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments