ரெம்டெசிவரை ஆபத்து கட்ட நோயாளிகளுக்கு சோதனை மருந்தாக வழங்கலாம்

ஆபத்தான கட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சோதனை மருந்தாக ரெம்டெசிவரை வழங்கலாம் என சிகிச்சை விதிகளில் சுகாதார அமைச்சகம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மருந்து மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அபாய கட்டத்தின் துவக்கத்தில் பிளாஸ்மா தெரபி, டோசிலிஜுமேப் ((tocilizumab)) ஊசி மருந்தை செலுத்தவும் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ஐசியூ வில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகளை வழங்கலாம் என்ற பரிந்துரையை சுகாதார அமைச்சகம் வாபஸ் பெற்றுள்ளது.
இந்த மருந்துகளை நோயின் ஆரம்ப கட்டத்தல் மட்டுமே வழங்கலாம் என கொரோனாவுக்கான திருத்தப்பட்ட மருத்துவ விதிகளில் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
ரெம்டெசிவரை ஆபத்து கட்ட நோயாளிகளுக்கு சோதனை மருந்தாக வழங்கலாம் #Remdesivir #Covid19Therapy https://t.co/MA8WP6VahY
— Polimer News (@polimernews) June 14, 2020
Comments