டெல்லியில் திங்களன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு

0 1465

டெல்லியில் கொரோனா பரவலைத் தடுப்பது குறித்துப் பேசத் திங்களன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஞாயிறு காலையில் உள்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஹர்சவர்த்தன், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் கலந்துகொண்டனர். மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர்கள், ஆணையர்கள், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் திங்கள் பகல் 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments