தேர்தல் பிரச்சாரம் செய்ய டிரம்ப் திட்டம் - கொரோனா தொற்று அதிகரிக்கும் என நிபுணர்கள் அச்சம்

0 1569

கொரோனா பரவலால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் சனி அன்று அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசுவதாக வெளியாகும் அறிவிப்பு பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

வரும் டிசம்பரில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்ப், ஒக்லஹோமா மாநிலத்தில் உள்ள தல்சா ((Tulsa)) வில் சனி அன்று பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதால் இந்த நகரை அவர் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆட்கள் திரளாக வருவாவர்கள் என்பதால் வைரஸ் தொற்று பரவும் ஆபத்தும், அவர்கள் மூலம் வீடுகளில் இருப்பவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் என ஹார்வார்டு சர்வதேச சுகாதார கழகத்தின் இயக்குநர் ஆஷிஷ் ஜா  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments