மர்மநபர்கள் வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி படுகாயமடைந்த சிறுத்தை

0 1405

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மர்மநபர்கள் வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி படுகாயமடைந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், மருத்துவக்குழு மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மோத்தேபாளையம் பகுதியில் தனியார் தோட்டத்தில் உறுமல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்து ஆய்வு செய்ததில் சிறுத்தை ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்ட வனத்துறையினர், மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று, கோவையிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டு 3 நாட்கள் இருக்கும் என தெரிவித்துள்ள வனத்துறையினர், சுருக்குக் கம்பி வைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments