அமெரிக்காவின் 18 மாநிலங்களில் வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு

0 3449

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,540 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பரவி உள்ளது.

இவர்களையும் சேர்ந்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20,74,526 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்தவர்களில் 767 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

இதனால் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,15,436 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் ஓரிகான், வியோமிங், ஒக்லஹாமா, சவுத் கரோலினா, அலபாமா  உள்ளிட்ட 18 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

17 மாநிலங்களில் தொற்று குறைந்து வரும் நிலையில், 13 மாநிலங்களில் நிலைமை மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments