அதிமுக எல்.ஏ பழனியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் என தகவல்

0 1560

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனியின் உடல்நிலை  நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ கே.பழனி கடந்த வெள்ளியன்று இரவு மூச்சுத்திணறல், காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments