'பரோட்டோ சூடு செய்து சாப்பிடவேண்டியிருப்பதால் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி- தீர்ப்பாயத்தின் வில்லங்க பதில்

0 7107

மிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் முக்கிய உணவுப் பொருளாகத் திகழ்வது பரோட்டா. இதற்கு 18 % ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. ஆனால், சப்பாத்தி ரொட்டி ஆகியவற்றுக்கு 5 % மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபாடு எதற்காக என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்த நிலையில் அதற்கான பதில் வெளியாகியிருக்கிறது.

image

அதாவது ரெடிமேட் பரோட்டாவைச் சாப்பிடுவதற்குச் சூடு செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தான் பரோட்டாவுக்கு மட்டும் 18% வரி விதிப்பு என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை மையமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது ஐடி ப்ரெஷ் புட் (ID Fresh Food) எனும் தனியார் நிறுவனம். இது இட்லி - தோசை மாவு, பரோட்டா, தயிர், பன்னீர் ஆகியவற்றை ரெடிமேட் உணவுப் பொருள்களாகப் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.

இந்தத் தனியார் நிறுவனம் உணவுப் பொருள்கள் மீதான வரிவிதிப்பு குறித்து மத்திய அரசின்  AAR (Authority for Advance Rulings) நிறுவனத்தில் புகார் அளித்தது. இந்தப் புகாரில், "ரொட்டி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 % ஜி.எஸ்.டி விதிக்கப்படும் நிலையில் பரோட்டாவுக்கு மட்டும் ஏன் 18 % ஜி.எஸ்.தி விதிக்கப்படுகிறது. இதை மாற்றியமைக்க வேண்டும்" என்று கேட்டிருந்தது. இந்த AAR நிறுவனம் ஜி.எஸ்.டி தொடர்பான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

image

இந்தப் புகார் குறித்து விசாரித்த  AAR, "ரொட்டி, சப்பாத்தி வகையில் பரோட்டா சேராது. அதனால் ரொட்டி, சப்பாத்திக்கு விதிக்கும் 5 % வரியை விதிக்க முடியாது. விதி 1905 - ன் கீழ் வரும் அனைத்து ரொட்டி வகைகளும் முழுமையாகத் தயாரிக்கப்பட்டதாக, சமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அதற்கு 5 % வரி விதிக்க முடியும். ஆனால், பரோட்டாவைச் சமைப்பதற்கு முன்பு சூடு செய்ய வேண்டும். அதனால் பரோட்டா மீதான வரியைக் குறைக்க முடியாது. 18 % ஜி.எஸ்.தி வரி தொடரும்" என்று கூறியிருக்கிறது.

இந்த முடிவுக்குப் பொதுமக்கள் #HandsOffParotta என்று சமூக வலைத்தளங்களில் போராட்டம் நடத்தினர். 'ரொட்டி, சப்பாத்தி ஆகியவற்றையும் சாப்பிடுவதற்கு முன்பு சூடு செய்தால் மட்டுமே சாப்பிடமுடியும். இந்த நிலையில் பரோட்டாவுக்கு மட்டும் அதிக வரி விதித்திருப்பது பாகுபாடானது’ என்று பலர் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments