திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களில் ரூ.43 லட்சம் மட்டுமே காணிக்கை வசூல்

0 1279

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் கடந்த 3 நாட்களில் 43 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் 82 நாட்களுக்கு பின்னர் கடந்த 11ம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய  அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் கடந்த 3 நாட்களில் 13 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். மேலும் 43 லட்ச ரூபாய் அளவுக்கு உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

ஊரடங்கிற்கு முன்பு திருப்பதியில் நாளொன்றுக்கே 2 முதல் 3 கோடி ரூபாய் வரை காணிக்கை வசூலாகும் நிலையில், தற்போது குறைவான பக்தர்களே அனுமதிக்கப்படுவதால் உண்டியல் வருவாயும் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments