திருச்சி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுமா..?

0 24105

திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 12-ஆம் தேதி முதல், தினமும் சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி சோழன்  எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கும் திருச்சியிலிருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் முறையே 14 மற்றும் 16 பெட்டிகள் உள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.

மற்ற பெட்டிகள் பயணிகள் கூட்டம் இன்றி  வெறிச்சோடி காணப்படுகின்றன. பயணிகள் முகக் கவசம் அணியவும், உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு தனி நபர் இடைவெளியுடன் அமரவும் அறிவுறுத்தப்படும் நிலையில் பெரும்பாலானோர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments