ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் தற்போதும் கவனம் : ஜெட் ஏர்வேஸ்

0 826

ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதை தற்போதும் கவனத்தில் வைத்திருப்பதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளையும், அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்பிரஸின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட வரையறைகளை படித்த இண்டிகோ, எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தன. அதேபோல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் போட்டியில் இருந்து பின்வாங்குவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இங்கிலாந்தில் பேட்டியளித்த ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், ஏர் இந்தியா நிறுவன ஏலத்தில் பங்கேற்கப்போவதில்லை என தாம் தெரிவிக்கவில்லை எனக் கூறினார். ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது துணிச்சலான சிறந்த முடிவு எனக் கூறிய அவர், அது வெற்றியைத் தரும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments