துளசி, அதிமதுரம் உள்ளிட்ட மூலிகை பொருட்கள் அடங்கிய முகக்கவசங்கள் மலிவான விலையில் விற்பனை

0 15573

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துணிப்பை விற்பனை செய்து வந்த சீனிவாசராகவன் என்பவர் மூலிகைப் பொருட்கள் அடங்கிய முகக்கவசங்கள் மலிவான விலையில் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

இயற்கை நோய் கிருமி நாசினிகளான துளசி, அதிமதுரம், வெட்டிவேர், சுக்கு உள்ளிட்ட இயற்கை மூலிகைகளை சிறிய பையில் அடைத்து அதை முகக்கவசத்தினுள் வைத்து, தைத்து தயாரிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 3ஆயிரம் மாஸ்க்குகள் வரை தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை முகக்கவசங்கள் 20 ரூபாய்க்கும், மூலிகை பொருட்கள் அடங்கிய பைகள் 7 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இவை ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments