கொரோனா பாதிப்பு - 51 சதவிகிதம் பேர் குணமாகினர்

0 2094

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 51 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.

ஞாயிறு காலை நிலவரப்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்து 65 ஆயிரத்து 794 ஆக உள்ளது. 4 லட்சத்து 32 ஆயிரத்து 394 பேர் உயிரிழந்தனர். 40 லட்சத்து 40 ஆயிரத்து 784 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் குணமடைந்தோரின் விகிதம் 51 புள்ளி மூன்று ஏழு விழுக்காடாகும்.

உலகம் முழுவதும் 33 லட்சத்து 92 ஆயிரதது 616 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் 43 விழுக்காடாகும்.

குணமடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா ஆறாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 379 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் குணமடைந்தோரின் விகிதம் 50 புள்ளி நான்கு எட்டு விழுக்காடாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments