சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது

0 3304

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 444ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5 ஆயிரத்து 56ஆக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உள்ளது.

இதற்கடுத்து தண்டையார்பேட்டையில் 3,928ஆகவும், தேனாம்பேட்டையில் 3,652ஆகவும், கோடம்பாக்கத்தில் 3,267ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

அண்ணாநகரில் 2,960ஆகவும், திருவிக நகரில் 2,772ஆகவும், அடையாறில் 1,725ஆகவும், வளசரவாக்கத்தில் 1,338ஆகவும், திருவொற்றியூரில் 1,113ஆகவும், அம்பத்தூரில் 1,058ஆகவும் அதிகரித்துள்ளது.

மொத்தம் 10 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இதுவரை சிகிச்சையில் 15,765 பேர் குணமான நிலையில், 314 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments