சத்தீஸ்கர் மாநில வனத்துறையில் கர்ப்பமாக இருந்த யானை உள்பட 3 யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு

0 978

சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் கர்ப்பமாக இருந்த யானை உள்பட 3 யானைகள் உயிரிழந்ததால் 4 வனத்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பால்ராம்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெண் யானை ஒன்று உயிரிழந்தநிலையில் கிடந்தது. இதேபோல் சூரஜ்பூர் மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி கர்ப்பிணி யானையும் அதனுடன் மற்றொரு யானையும் மரணித்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து வனப்பகுதியையும், உயிரினங்களையும் சரியாக கவனிக்காத 4 வனத்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். யானையின் உடல்களைச் சோதனை செய்ததில் அதன் வயிற்றில் ரசாயன உரங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments