'கல்வியில் முன்னேறியிருந்தாலும், மென்டல்லி வளரவில்லை! '- பினராயி விஜயன் மகள் திருமணத்தால் மோதிக் கொள்ளும் கேரள மக்கள்

0 27639


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கமலா என்ற மனைவியும் வீனா என்ற மகளும் விவேக் என்ற மகனும் உண்டு. இதில், வீணாவுக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. ஒரு மகன் இருக்கிறார். பெங்களூருவில் தனியாக மென்பொருள் நிறுவனத்தை வீணா நடத்தி வருகிறார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் முகமது ரியாசுக்கும் வீணாவுக்கும் விருப்பம் இருந்துள்ளது. முகமது ரியாசும் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், பினராயி விஜயனும் அதற்கு சம்மதித்தார். இவர்களின் திருமணம் நாளை (ஜூன் 15- ந் தேதி )திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். 

வீணா இந்து வகுப்பைச் சேர்ந்தவர். முகமது ரியார் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். மேலும், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட போது, கேரளா முழுவதும் மாட்டிறைச்சி சாப்பிடும் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியவர். இதனால், வீணா முகமது ரியாஸை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் இந்துக்கள் பலரும் வீணாவை விமர்சித்துள்ளனர்.

சாதிரீதியாக, மதரீதியாகவும் அந்த விமர்சனம் இருந்தது. 'உண்மையிலேயே இவர்கள் கம்யூனிஸ்ட்களா அல்லது வீணா மத மாற்றம் செய்யப்பட்டுள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ' என்று பிரீத்தி காந்தி என்பவர் விமர்சித்திருந்தார். ராகேஷ் கிருஷ்ணன் சிம்ஹா என்பவர் தன் ட்விட் பதிவில், 'கேரளாவில் மத சார்பற்ற இந்துக்கள் பின்பற்ற வேண்டிய வழியை முதல்வரும் அவரின் மகளும் காட்டியிருக்கின்றனர்.. கேரளாவில் எங்கேயாவது ஒரு முஸ்லிம் பெண் இந்து மணமகனை மணந்துள்ளார் என்கிற விஷயத்தை கேள்விப்பட்டிருக்க முடியுமா' என்று குற்றம் சாட்டியிருந்தார். 

பினராயி மகள் திருமணத்தால் கேரளாவில் இரு பிரிவாக மக்கள் பிரிந்து சமூகவலைத்தளங்களில்  மோதிக் கொண்டிருக்கின்றனர். வீணாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். அதில், பெஞ்சமின் என்பவர் மலையாளிகளை கடுமையாக தாக்கி எழுதியுள்ளார். இதுவும், சமூகவலைத் தளத்தில் வைரலாகியுள்ளது.

பெஞ்சமின் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது, '' திருமணம் செய்யும் முடிவு அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. . மற்றவர்களுக்கு  அவர்கள் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. அப்படியிருக்கையில் அவர்களின் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கும் உரிமை உங்ககளுக்கு எங்கிருந்து வந்தது? மலையாளிகளிடத்தில் ஒரு விசித்திர குணமுண்டு. அவர்கள் எப்போதும் அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பவர்கள். ஒரு ஆண் நண்பருடன் பெண் விருப்பப்பட்டு கடற்கரைக்கு சென்றால், மலையாளி அவர்களுக்கு தொல்லை கொடுக்கவே முயல்வான்.

இந்த விஷயத்தில் உலகிலேயே மிக மோசமானவர்கள் மலையாளிகள். கல்வியில் நாம் முன்னேறியிருந்தாலும், மென்டல்லி நாம் இன்னும் வளரவில்லை. முகமது ரியாசும், வீணாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பது அவர்களின் விருப்பம். அதனால், உங்களுக்கும் எனக்கு என்ன நடக்கப் போகிறது? இந்த பேரிடர் காலத்திலும் அடுத்தவர் விஷயததில் மூக்கை நுழைக்கும் உங்களை போன்றவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை! '' என்று எழுதியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments