கோவை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 8 மாத ஆண் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

0 3259

கோவை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 8 மாத ஆண் குழந்தையை 24 மணி நேரத்திற்குள் போலீசார் மீட்டனர்.

திருப்பூரில் வசித்து வரும் செல்வம் - செல்வராணி தம்பதிக்கு கோவை அரசு மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. வேலை வாங்கித் தருவதாக கூறி இவர்களிடம் நட்பாக பழகிய திருப்பூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபர், கடந்த 11ம் தேதி தனது மனைவி பிரபாவதியுடன் செல்வத்தின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் இரு தம்பதியரும் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை பெறச் சென்றுள்ளனர். அங்கு விக்னேஷும் அவரது மனைவி பிரபாவதியும் திட்டம் தீட்டி செல்வத்தின் ஒரு குழந்தையை கடத்தி சென்றனர்.

விசாரணை நடத்திய பந்தய சாலை போலீசார், 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு கடத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments