கொரோனா வார்டுகளாக மாறும் நர்சிங் ஹோம்கள்..!

0 1102

10 முதல் 49 படுக்கை வசதிகளை கொண்ட நர்சிங் ஹோம்களை, கொரோனா சிகிச்சை மையங்களாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவு படுக்கை வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரத்தியேக கண் பரிசோதனை மையங்கள், ஈ.என்.டி, டயாலிசிஸ், மகப்பேறு இல்லங்கள் மற்றும் ஐவிஎஃப் மையங்கள் ஆகியவற்றிற்கு இந்த அறிவிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படு உள்ளது.

டெல்லி தனியார் மருத்துவமனைகளில் ஏற்கனவே 70 சதவீதம் அளவிளான கொரோனா படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் மேலும் 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments