முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் நாளை ஆலோசனை

0 2273

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. வரும்16 , 17 ஆகிய தேதிகளில் மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், முன்னதாக இந்த ஆலோசனை  நடைபெற உள்ளது  குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments