ரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடு..!

0 2649

ரிலையன்ஸ் குழுமத்தின் டெலிகாம் நிறுவனமான ஜியோவில், அமெரிக்க முதலீட்டு நிறுவனமான டிபிஜி சுமார் 4,500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முதலீட்டின் மூலம் ஜியோ நிறுவனத்தின் பூஜ்ஜியம் புள்ளி 93 சதவீத பங்குகள் டிபிஜி நிறுவனத்திற்கு விற்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாயாகவும், நிறுவன மதிப்பு 5 லட்சத்து 16 ஆயிரம் கோடியாகவும் உள்ள நிலையில், இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 3 மாதங்களில் பேஸ்புக், சில்வர் லேக் போன்ற பெரு நிறுவனங்களால், கடனை குறைக்கும் விதத்தில் ஜியோ நிறுவனம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments