சீனாவில் புதியதாக 46 பேருக்கு கொரோனா தொற்று

0 1817

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 3 நாட்களில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

அந்நாட்டில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று அங்கு கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெய்ஜிங்கின் சுமார் 2 கோடி பேருக்கு அத்தியாவசிய பொருட்களின் ஆதாரமாக உள்ள, ஜின்ஃபாடி மொத்த உணவு சந்தை கொரோனாவிற்கான மையப் பகுதியாக மாறி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நகரில் ஜின்ஃபாடி உள்ளிட்ட 7 சந்தைகள் மூடப்பட்டு உள்ளன.

மேலும், ஜின்ஃபாடி சந்தையை சுற்றியுள்ள பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments