கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநருடன் இன்று அமித் ஷா ஆலோசனை

0 1074

டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

டெல்லியில் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடும் கொரோனா வைரசை தடுப்பதற்காக இந்த வாரத்தில் அமித் ஷாவும் கெஜ்ரிவாலும் இரண்டாவது முறையாக சந்திக்கின்றனர். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பாய்ஜாலும் அமித் ஷாவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

டெல்லியில் கொரோனா பாதிப்புகளைத் தவிர்க்க, ஆலோசனைகளை வழங்குவதற்காக 6 நபர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவை டெல்லி ஆளுநர் நியமனம் செய்ததையடுத்து இச்சந்திப்பு நடைபெற இருக்கிறது.

டெல்லி மருத்துவமனையில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வந்த தகவல்களையடுத்து விளையாட்டு மைதானங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments