கொரோனா போரில் பிரதமர் மோடி மத்திய அரசு தீவிர ஆலோசனை

0 10274

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பில், உலக அளவில் 4 - வது இடத்தில் இருந்து 3- வது இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் சூழலில் , உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா உள்ளிட் டோருடன் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசர காலத்தை எதிர் கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தினார்.

தற்போதுள்ள கொரோனா தடுப்பு பரிசோதனை, நோயாளிகளுக்கான படுக்கைகள், மருத்துவ சேவைகள் குறித்தும், மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உயரும் கொரோனா பாதிப்பை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே, 6ஆவது முறையாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி வருகிற 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

முதல் நாள் பிற்பகல் 3 மணிக்கு துவங்கும் இக்கூட்டத்தில் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

மறு நாள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments