ஒரே நாளில் சென்னையில் 1,487 பேருக்கு கொரோனா உறுதி

0 1467

தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு என்ற அளவை எட்டும் வகையில், சென்னையில் கொரோனா பாதிப்பு, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

ஒரே நாளில் ஆயிரத்து 487 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, 30 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை யின் அருகாமை மாவட்டங் களான செங்கல்பட்டில் புதிதாக 136 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

திருவள்ளூரில்  புதிதாக 78 பேரும், காஞ்சி புரத்தில் 22 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, திருவண்ணாமலையில் 50 , தூத்துக்குடியில் 30 , நெல்லையில் 18, மதுரை மற்றும் திருவாரூரில் தலா 15 , சிவகங்கை, வேலூர், விழுப்புரத்தில் தலா 13, கள்ளக்குறிச்சி, கன்னியா குமரியில் தலா 11 பேருக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

தமிழ கத்தில் கொரோனாவுக்கு இரை ஆன 397  பேரில், 316 பேர் சென்னை யைச் சேர்ந்தவர்கள். சுமார்  14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னையின் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை, சுமார் 16  ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments