கொரோனா வைரசில் மரபணு ரீதியாக திடீர்மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

0 4300

கொரோனா வைரஸ், மரபணு ரீதியாக திடீர்மாற்றத்திற்கு உள்ளாகி, அதன் நிலைப்புத் தன்மையும் தொற்றுத் திறனும் அதிகமாகியிருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தற்போது பரவி வருகிற கொரோனா வைரஸ், செயல்திறன் மிக்கதாகவும், மனித செல்லில் பிணைத்துக்கொள்ளும் கூரிய முனைகள் அதிகம் கொண்டதாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் D614G என்ற திடீர்மாற்றத்தால் ஏற்பட்டது என்றும், தொடக்கத்தில் நோய்த்தொற்று பரவிய பகுதிகளில், வைரஸில் இந்த திடீர்மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments