நேபாளத்தில் கொரோனா நெருக்கடியை அரசு கையாளும் விதத்தை கண்டித்து போராட்டம்

0 1108

நேபாளத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடியை அரசு கையாளும் முறையை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க இந்திய மதிப்பில் சுமார் 676 கோடி ரூபாய் செலவளித்துள்ளதாகவும், 3 லட்சத்துக்கும் அதிகமாக பரிசோதனைகள் நடத்தி உள்ளதாகவும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தியுள்ளதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. 3 கோடி பேர் வாழும் நாட்டில் இது போதாது என்று கூறி தலைநகர் காத்மண்டுவில் 3வது நாளாக போராட்டம் நடத்தியவர்களில் 7 வெளிநாட்டவர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments