ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே.பழனிக்கு கொரோனா உறுதி

0 6246

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்த அவர், அண்மையில் சென்னை சென்று வந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு வந்தவருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து எம்.எல்.ஏ பழனி நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மூச்சு திணறல் உள்ளதால் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதே சமயம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments