கீழடி 6-ஆம் கட்ட அகழாய்வு: பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டுபிடிப்பு

0 9401

கீழடி 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளில் இதுவரை முதுமக்கள் தாழிகள், மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள், பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மிக் குளவி,  கொள்கலன்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் மணலுரில் 2 வாரங்களுக்கு முன் கண்டறியப்பட்ட  மண் பாண்டங்களை சூடு செய்ய பயன்படும் சுமார் ஒன்றரை மீட்டர் சுற்றளவிலான உலை கலனிலிருந்து பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள்  கண்டறியப்பட்டுள்ளன. இவை தொழில் கூடங்களில் பயன்படுத்தப்பட்டவையா அல்லது வீட்டில் பயன்படுத்தப்பட்டவையா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments