அதிபர் தேர்தலில் தோற்றால் மற்ற விஷயங்களை செய்ய சென்று விடுவேன்-ட்ரம்ப்

0 1996

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றால் தான் மற்ற விஷயங்களை செய்ய சென்றுவிடுவேன் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ட்ரம்ப் தேர்தலில் மோசடி செய்யக்கூடும் என்பதே தனது மிகப்பெரிய கவலை என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்திருந்தார்.

மேலும், வெள்ளை மாளிகையை விட்டு ட்ரம்ப் வெளியேற மறுக்கக்கூடும் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் மற்ற வேலைகளை செய்ய சென்று விடுவேன் என்று ஜோ பிடன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments