மோட்டார் அல்லாத போக்குவரத்துக்குப் புத்துயிர்..!

0 1191

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கு மோட்டார் அல்லாத போக்குவரத்துக்குப் புத்துயிரூட்ட வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கப் பொதுமக்கள் பொதுப்போக்குவரத்துக்கு மாற்றாகத் தனியான போக்குவரத்தையே விரும்புகின்றனர். இதனால் மிதிவண்டி உள்ளிட்ட மோட்டார் அல்லாத போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், புத்துயிரூட்டவும் மாநில அரசுகளுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நியூயார்க்கில் மிதிவண்டிகளுக்காக 40 மைல் தொலைவுக்குப் புதிய பாதைகள் அமைத்துள்ளதையும், ஓக்லாந்தில் 10 விழுக்காடு தெருக்களில் மோட்டார் வாகனங்கள் செல்லக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளதையும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கொலம்பியாவின் பொகோட்டா நகரில் ஒரேநாளில் 76 கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டிப் பாதைகள் அமைத்ததையும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பொதுப் போக்குவரத்தில் பணமில்லாப் பரிமாற்றத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments