சீன எல்லையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது: ராணுவ தளபதி நராவனே

0 2015

சீனா எல்லையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக இந்திய ராணுவ தளபதி நராவனே தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு நேரிட்டு படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பிலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சகமும் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய நராவனே, எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும் படைப்பிரிவு கமாண்டர்கள் மட்டத்திலும்,  உள்ளூர் கமாண்டர் மட்டத்திலும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும், இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவின்படி, இருநாடுகளும் படையினரை பெருமளவு எல்லையில் இருந்து வாபஸ் பெற்று விட்டதாகவும் குறிப்பிட்டார். இதனால் எல்லையில் நிலைமை தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments