ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த 423 பேருக்கு வழியனுப்பு விழா

0 928

உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த அதிகாரிகள் 423 பேரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இந்தியர்கள் 333 பேரும், 9 வெளிநாடுகளைச் சேர்ந்த 90 பேரும் பயிற்சி பெற்று வந்தனர். இவர்களுக்குப் பயிற்சி முடிந்த நிலையில் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் ராணுவத் தலைமைத் தளபதி முகுந்த் நரவானே கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பைப் பார்வைட்டார்.

கொரோனா பரவலைத் தடுக்கச் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அகாடமியின் வரலாற்றில் முதன்முறையாக ராணுவ அதிகாரிகளின் வழியனுப்பு விழாவில் பெற்றோர் பாதுகாவலர்கள் பங்கேற்கவில்லை. பயிற்சி முடித்த இந்தியர்கள் 333 பேரும் இன்றுமுதல் ராணுவத்தின் பணியில் சேர்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments