இத்தாலியில் ஒரு வீட்டின் விலை ரூ.76க்கு விற்பனை

0 38862

இத்தாலி நாட்டில் கலப்ரியா மாகாணத்தில் ஒரு வீட்டின் விலை ஒரு டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் 76ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சின்கியூபுரோன்டி பகுதியில் உள்ள ஒரு கிராம ம் கொரோனா இல்லாத கிராம மாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள பழமை வாய்ந்த வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அப்பகுதி மேயர் மைசிலி கோனியா கூறும் போது இந்த திட்டத்திற்கு ஆபரேசன் பியூட்டி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார்.

இத்திட்டத்தின் படி ஒரு வீட்டின் விலை ஒரு டாலராகும் என்றும் வீடுகளை வாங்குபவர்கள் அதனை புதுப்பிக்கும் வரை ஆண்டு பாலிசி காப்பீடு கட்டணமாக 280டாலர் கட்ட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாங்கிய வீட்டை 3ஆண்டுகளுக்குள் புதுப்பிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு 22ஆயிரத்து 470டாலர் அதாவது இந்திய மதிப்பில் 17லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments