பெட்ரோல் விலை ஒரு வாரத்தில் லிட்டருக்கு ரூ.3.45 அதிகரிப்பு

0 621

பெட்ரோல் விலை கடந்த ஒரு வாரத்தில் 3 ரூபாய் 45 காசுகளும், டீசல் விலை கடந்த ஒரு வாரத்தில் 3 ரூபாய் 42 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 6ம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை சென்னையில் லிட்டர் 75 ரூபாய் 54 காசுகளாக இருந்தது. அந்த விலை 7ம் தேதி முதல் சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டது. அந்த  வகையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 52 காசுகள் உயர்த்தப்பட்டு 78 ரூபாய் 99 காசுகளாக உள்ளது.

இதேபோல் டீசல் விலை சென்னையில் கடந்த 6ம் தேதி லிட்டர் 68 ரூபாய் 22 காசுகளாக இருந்தது. அந்த விலையும் 7ம் தேதி முதல் படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. இன்று டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு 71 ரூபாய் 64 காசுகளாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments