ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா..!

0 7140

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமில்லாத உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்தலில் இந்தியாவும் களம் இறங்கியுள்ளது.கனடா, மெக்சிகோ, நார்வே, ஜிப்போட்டி, அயர்லாந்து, கென்யா ஆகிய நாடுகளும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.

இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் இப்பதவிக்கு, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ள இந்தியா உறுப்பினராக வெல்வது உறுதி என்று ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி TS திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.(TS Tirumurti) சென்னையைச் சேர்ந்தவரான திருமூர்த்தி முதன் முதலாக இது தொடர்பாக நியுயார்க்கில் இருந்து இந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் என்ற பாகிஸ்தானின் பொய்ப்பிரச்சாரம் உலக நாடுகளிடம் எடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார். ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்புநாடாக இடம் பெறக் கூடிய காலம் கனிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தானின் தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு நிதி திரட்டலுக்கு எதிராக இந்தியாவின் போராட்டம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தொடரும் என்றும் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments