மேட்டூர் அணை நீர்திறப்பு அதிகரிப்பு..!

0 3298

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று மாலைக்குள் முக்கொம்பை சென்றடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், சரோஜா ஆகியோரும் மலர்களைத் தூவி காவிரித் தாய்க்கு மரியாதை செய்தனர்.

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குறுவை சாகுபடிக்காக 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்றும், இதனால் ஐந்தேகால் லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஜனவரி இறுதிக்குள் முடிவடையும் என்றும் கூறினார். மேட்டூர் அணைப் பூங்காவில் 25 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொங்கு பாலம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு நேற்றிரவு 10ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்த தண்ணீர் இன்று மாலைக்குள் முக்கொம்பை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments