அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர மேலும் 10 விமானங்கள்

0 1054

அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர கூடுதலாக பத்து ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணிக்கு இவற்றுக்கான முன்பதிவு ஏர் இந்தியாவின் இணையபக்கத்தில் தொடங்குகிறது.  நியுயார்க், வாஷிங்டன் நகரங்களுக்கு தலா 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சிகாகோ, சான்பிரான்சிஸ்கோவுக்கு தலா ஒருவிமானம் இயக்கப்டும். ஜூன் 20 முதல் ஜூலை 3ம் தேதி வரை இந்த விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்தியா அமெரிக்கா இடையே 70 விமானங்கள் இயக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments