சலவைத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை..!

0 1600

ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில், தங்கள் வறுமையைப் போக்கத் தமிழக அரசு உதவ வேண்டும் எனச் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கால் முடங்கிய பல தொழில்கள் மெல்ல, மெல்ல மீண்டு வரும் நிலையில், சலவைத் தொழில் மீளா நிலையிலேயே கிடக்கிறது. மாநிலம் முழுவதும் 5 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் சலவைத் தொழில் செய்து பிழைத்து வருகின்றன.

சென்னையில் சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக் கூடிய 27 சலவைத் துறைகளை நம்பி 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்து வருகின்றனர்.

ஊரடங்கில் இருந்து தொழில்துறைக்குப் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், வீடுகளில் இருந்தே ஏராளமானோர் பணியாற்றுவது, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது உள்ளிட்ட காரணங்களால் சலவைக்குத் துணிகள் போடுவது முற்றிலுமாக நின்று விட்டதாகக் கண்ணீர் விடுகின்றனர் சலவைத் தொழிலாளர்கள்.

அலுவலகங்களுக்குச் செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களும் வெளியில் துணிகளைச் சலவைக்குத் தந்தால் அதன் மூலம் தொற்று ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிச் சலவைக்குத் துணிகளைத் தருவதில்லை எனக் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

ஊரடங்குக்கு முன்பு கிடைத்த துணிகளில் 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இப்போது கிடைத்து வருவதாலும், வேறு தொழில் தெரியாது என்பதாலும் வறுமையின் விளிம்பில் தள்ளாடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் சலவைத் தொழிலாளர்கள்.

மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தள்ளாடி வருவதால், "துணிகளில் உள்ள கறைகளைப் நீக்கும் தங்கள் வாழ்வின் குறைகளை நீக்க அரசு முன் வர வேண்டும்" என்பதே சலவைத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments