சென்னையில் இருந்து வெளியூர் சென்றால் இதுதான் நடக்கும்..! வீட்டிலேயே தனித்திருங்கள்

0 67272

சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர் ஒருவர் வீட்டில் தனித்திருக்கும் உத்தரவை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வாக்குவாதம் செய்ததால் அவரை லத்தியால் இடித்து காவல்துறையினர் ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் சென்னைக்கு போனா எப்படியாச்சும் பொழச்சிகலாம்ன்னு பிழைப்பு தேடி வந்தவ பலர், தற்போது சென்னையை விட்டு போன போதும் பொழச்சிக்கலாம்ன்னு கொரோனாவுக்கு பயந்து சொந்த ஊர்களுக்கு கிடைக்கும் வாகனங்களில் ஏறி புறப்பட்டு செல்வதை வாடிக்கையாகி வருகின்றனர்.

அந்தவகையில் சென்னையில் இருந்து மருத்துவ காரணத்திற்கு என்று இ பாஸ் பெற்று நாகர்கோவில் சென்றவர் 60 வயதான ஓய்வு பெற்ற மாநராட்சி ஊழியர் சிவஞானம். இவர் அங்குள்ள மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகம் சென்ற போது அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார். 3 தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்ததாக சொன்னதும் அங்கிருந்த அதிகாரிகள் மிரண்டு போய் அவரை வெளியில் அனுப்பியுள்ளனர்.

அங்கிருந்த சுகாதாரதுறை அதிகாரிகள், அவரிடம் விசாரித்த போது, தனது வீட்டின் பின்புறம் உள்ள குளத்தை தூர்வாருவதற்காக மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் சிவஞானம். அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறிய போது, மறுப்பு தெரிவித்த சிவஞானம் தான் ஏற்கனவே திருநெல்வேலியில் பரிசோதனை செய்து கொண்டதாகவும் சோதனை முடிவுகள் வரும் வரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை அங்கிருந்து வீட்டுக்கு செல்லும் படி அதிகாரிகள் கூற, மறுத்த சிவஞானம் பாதுகாப்புக்கு வந்த கவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

தனிமைபடுத்தலில் இருக்க வேண்டியவர் வெளியில் வரக்கூடாது என்றும் அங்கு கொண்டுவரப்பட்ட ஆம்புலன்சில் ஏறவும் போலீசார் பலமுறை எடுத்துச்சொல்லியும் கேட்காமல் கலெக்டர் அலுவலக வாயிலில் நின்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து பொறுமை இழந்த போலீசார் கையால் தொட்டால் கொரோனா தனக்கு வந்து விடும் என்ற அச்சத்தில், கையில் வைத்திருந்த லத்தியை வைத்து, மட்டை குத்துவது போல 2 இடி இடித்து அவரை ஆம்புலன்சிற்கு தள்ளிச் சென்றார்

அதன் பின்னர் சிவஞானத்தை ஆம்புலன்சில் ஏற்றி சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டதுடன் ரிசல்ட் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைத்தனர்.

இவர் மட்டுமல்ல சென்னையில் இருந்து கிடைக்கும் வாகனங்களில் ஏறிச் சென்று தென்மாவட்டங்களை தேடிச்செல்லும் நபர்களை மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, ரிசல்ட் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருக்க வைத்துவிடுகின்றனர். பரிசோதனைக்கு மறுத்தால் அவர்கள் கொடிய நோய்த்தொற்றை பரப்பிய குற்றத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து தப்புவதாக நினைத்து, ஊர்விட்டு ஊர் சென்று புதிதாக நோய் தொற்றை பரப்புவதற்கு பதிலாக அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தாலே சென்னையில் கொரோனா நோய் தொற்றை தடுக்க இயலும் என்கின்றனர் மருத்துவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments