கொரோனாவை விரட்ட முத்த வைத்தியம்... அஸ்லம் பாபா அவுட்..! முத்தம் பெற்றவர்கள் அதிர்ச்சி

0 6805

கொரோனாவை விரட்ட பக்தர்களுக்கு முத்தம் கொடுத்து வந்த அஸ்லம் பாபா என்பவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் அவரிடம் முத்தம் பெற்ற 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முத்தத்தால் கொரோனாவை விரட்ட முயன்றவருக்கு நிகழ்ந்த சோக முடிவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... 

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வரும் கட்டிப்பிடி வைத்தியம் போல நோய் என்று வருபவர்களுக்கு ஹீலிங் செய்வதாக கூறி மருத்துவ முத்தம் கொடுத்து வந்தவர் அஸ்லம் பாபா..!

மத்திய பிரதேச மாநிலம் ராட்லா மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்து ஹீலிங் செய்வதாக கூறி பக்தர்களை நம்பவைத்த அஸ்லம் பாபா பல ஆண்டுகளாக அருள்வாக்கு கூறி வந்தார். இந்த நிலையில் கொரோனா பரவல் குறித்து மாநில நிர்வாகம் தனித்திருக்குமாறு எச்சரித்த போது அதனை கேட்காமல் ஒற்றை முத்தத்தில் கொரோனாவை விரட்டுவதாக சவால் விட்டார் அஸ்லம் பாபா..!

இதையடுத்து கொரோனா அச்சத்தில் இருந்த பலர் அஸ்லம் பாபாவை தேடி வந்து முத்தம் பெற்று சென்றனர். அப்படி வந்து சென்ற நபர்களில் யாரோ ஒருவர் அஸ்லம் பாபாவுக்கு கொரோனாவை கொடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்ட்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்லம் பாபா பரிதாபமாக பலியானார். அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முத்தல் பெற்று சென்ற நபர்கள் குறித்து மத்திய பிரதேச மாநில சுகாதார துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

முதலில் 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது கண்பிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய அளவில் ((10049 பேருடன்)) 7 வது இடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தில் 430க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு விடப்பட்ட சவாலில் அஸ்லாம் பாபாவை அவுட் செய்து கொரோனா பெருந்தொற்று தனது வீரியத்தை காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விழித்திருப்போம், தனித்திருப்போம் பொது இடங்களில் முககவசம் அணிந்து தனி நபர் இடைவெளியை கடைபிடித்து கொரோனா பரவுதலை தடுப்போம்.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments