சென்னையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்க கூட்டு முயற்சி

0 3451

கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் சென்னையில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் இணைந்து ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில், கொரோனாவிற்கான தடுப்பூசி இன்னமும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடிப்பிற்கான ஆராய்ச்சியை இணைந்து மேற்கொள்வதென எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும், கபசுரக் குடிநீர் மற்றும் நொச்சிக் குடிநீர் தொடர்பாகவும் கூட்டாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments