சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நகரும் வெண்மை நிற உருவம்

ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பகல் நேரத்தில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் உருவம் ஒன்று போலீசாரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு செல்லும் மாவட்ட எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று உள்ளது. இங்குள்ள சோதனைச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கேமராவில், சில தினங்களுக்கு முன் பட்டப்பகலில் சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறத்துக்கு வெண்மை நிறத்தில் உருவம் ஒன்று கடந்து போவது போல் பதிவாகியுள்ளது.
சிக்னல் குறைவு காரணமாக கேமராவில் ஏற்படும் இமேஜ் அலையாசிங் ( Image Aliasing ) எனப்படும் ஒருவகை தொழில்நுட்பக் கோளாறாலும் இதுபோன்ற உருவங்கள் தோன்றும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Comments