தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா உறுதி

0 7338

தமிழகத்தில், இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக ஆயிரத்து 982 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 700 - ஐ நெருங்கி உள்ளது. கொரோனாவின் பிடியில் இருந்து சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, "டிஸ்சார்ஜ்" செய்யப் பட்டு உள்ளனர். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 982 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 49 பேரும் அடங்குவர். இதன் மூலம் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 700 - ஐ நெருங்கி உள்ளது.

ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் கொரோனா வின் பிடியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 342 பேர் குணம் அடைந்து, இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 18 பேர் கொரோனாவுக்கு இரை ஆனார்கள். இவர்களில் 2 பெண்கள் உள்பட 8 பேர் தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தனர். 40 வயது மற்றும் 55 வயது என இரு பெண்கள் உள்பட 10 பேர் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். எனவே, தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி 367 ஆக உயர்ந்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 34 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆயிரத்து 727 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மட்டும் ஒருவ ருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments