GST அறிக்கை தாக்கல் செய்யாதோருக்குத் தாமதக் கட்டணம் இல்லை

0 1397

ஜிஎஸ்டி செலுத்த வேண்டியது இல்லாத நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்யாததற்கான தாமதக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தைக் காணொலி மூலம் நடத்திய அவர், 2017 ஜூலை முதல் 2020 ஜனவரி வரையிலான காலத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யாதவர்கள், வரி செலுத்த வேண்டியது இல்லாமல் இருந்தால், தாமதக் கட்டணம் இன்றி செப்டம்பர் இறுதி வரை அறிக்கை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்தார்.

2017 ஜூலை முதல் 2020 ஜனவரி வரையிலான காலத்துக்கு வரி செலுத்த வேண்டி இருப்பவர்கள், அறிக்கை தாக்கல் செய்யாமல் இருந்தால், தாமதக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்தி செப்டம்பர் இறுதி வரை அறிக்கை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்தார்.

இதேபோல் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் நடப்பாண்டின் மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான அறிக்கையை செப்டம்பர் இறுதி வரை தாமதக் கட்டணம் இன்றித் தாக்கல் செய்யலாம் என அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments