இந்திய -நேபாள எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலி

0 6578

பீகாரில் உள்ள எல்லைப் பகுதியில் நேபாள போலீசார் நடத்தியதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்த தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீத்தாமார்கி மாவட்டத்தில் லால்பன்டி-ஜங்கி நகர் எல்லையில்,நேபாள போலீசாருக்கும், சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நேபாள எல்லைக்குள் இருந்து அந்த நாட்டு போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவர் 25 வயதான விகேஷ் குமார் ராய் என்று பீகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்திர குமார் பாட்னாவில் தெரிவித்தார். அந்த பகுதியில விவசாய நிலம் தொடர்பாக அடிக்கடி இருதரப்பு உரசல் ஏற்படுவதாகவும் நேபாள எல்லையை கடக்க முயன்றவர்களை விரட்ட கடந்த 17 ஆம் தேதி நேபாள போலீஸ் வானை நோக்கி சுட்டதாகவும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments