உலக அளவில் கொரோனா பாதிப்பு 76 லட்சத்தை தாண்டியது

0 982

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 38 லட்சத்து 52 ஆயிரம் பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.

உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதேபோல் பிற நாடுகளிலும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments