EMI விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு..!

0 177609

கடன் தள்ளி வைக்கும் 6 மாதத்துக்கு வங்கிகள் வட்டி பெறுமா? பெறாதா? என்பதைத் தீர்மானிக்க 3 நாட்களுக்குள் கூட்டுக் கூட்டத்தை நடத்த நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன்கள், கடன் தவணைகள் திருப்பிச் செலுத்துவது மார்ச் 1 முதல் ஆகஸ்டு 31 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலத்துக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தள்ளி வைக்கப்பட்ட காலத்துக்கான வட்டியுடன் கட்டணங்களும் சேர்த்து அதற்கு வட்டி கணக்கிடப்படுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கடன் தள்ளி வைக்கும் 6 மாதத்துக்கு வட்டி உண்டா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க 3 நாட்களுக்குள் கூட்டுக் கூட்டத்தை நடத்துமாறு நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 17ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments