கொரோனா இறப்பு எண்ணிக்கை: இந்திய அளவில் தமிழகம் 5ஆவது இடம் - மு.க.ஸ்டாலின்

0 2589

கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

4-ஆம் கட்டத்தை விட 5-ஆம் கட்ட ஊரடங்கின் போதுதான் கொரோனா பரவல் அதிகம் ஆகி வருவதைத்தான் அரசின் அறிக்கைகளும் அவற்றில் உள்ள தரவுகளும் சுட்டிக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை இராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் பலி எண்ணிக்கை காஷ்மீர், அரியானா, பீகார், கேரளாவை விட அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பலி எண்ணிக்கைக் தொடர்பாக சுகாதாரத்துறை கணக்கும், சென்னை மாநகராட்சி கணக்கும் முரண்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 30 ஆயிரத்தைக் கடந்திருக்கும் தொற்று, 2 இலட்சம் ஆகலாம் என அரசே உயர்நீதிமன்றத்தில் தகவல் தருவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிப்பது மட்டுமே அரசின் கடமை அல்ல என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments