ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி கைது

0 964

ஜம்மு காஷ்மீரில் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஒருவன் கைத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளான். சோபியான் மாவட்டத்தில் அண்மையில் நடந்த பல்வேறு துப்பாக்கிச் சண்டை சம்பவங்களில் ஏராளமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் சோபியான் மாவட்டம், கோஜ்புரா பகுதியில் பயங்கரவாதி ஒருவன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஜாகிர்கான் (Zakir Khan) கைது செய்யப்பட்டான்.

அவனிடமிருந்த நைன் எம்.எம். (9MM ) கைத் துப்பாக்கி, வெடிப் பொருள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவனையும் சேர்த்து இந்த ஆண்டில் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments