சசிகலா விடுதலை - சிறை நிர்வாகம் பதில்..!

0 5316

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலையாவார் என்பதை தேதி வாரியாக தெரிவிக்க முடியாது என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார்.

4 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து சசிகலா விடுதலையாகும் நாள் என்பது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 13 என கணக்கிடப்பட்டது. இதற்கிடையே செப்டம்பர் 13 அல்லது அதற்கு முன்னதாக சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சசிகலாவை விடுதலை செய்யும் தேதியை குறிப்பிட்டு கூற முடியாது என பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே சிறையில் இருந்து சசிகலா ஷாப்பிங் சென்றதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததால், நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கழிவு கிடைப்பது கேள்வி குறியாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments